கே.எல்.ராகுல் சதம்.. இரு அணிகளும் சம ரன்கள்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர்..!

Siva

ஞாயிறு, 13 ஜூலை 2025 (08:42 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இங்கிலாந்து அணி 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 104 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதைத் தொடர்ந்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தினார். அதேபோல், ரிஷப் பன்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் முறையே 74 மற்றும் 72 ரன்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 
 
இறுதியாக, இந்திய அணியும் 119 ஓவர்களில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் ஒரே ரன்களை எடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதன் பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சு எப்படி இருக்கும், இங்கிலாந்து அணி எவ்வளவு ரன்கள் குவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்