சேப்பாக்கம் ஆடுகளத்தால் 3 புள்ளிகளை இழக்குமா இந்தியா? அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:12 IST)
சேப்பாக்கம் மைதானம் மிகவும் மோசமானது என நடுவர் அறிவித்தால் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போது இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆடுகளம் மிகவும் மோசம் என்று கருத்தி சொல்லப்பட்டு வருகிறது. போட்டியின் முதல்நாளே சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதாகவும், இதனால் பேட்ஸ்மேன்களால் விளையாட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. போட்டி முடிந்த பின்னர் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் ஆடுகளம் மோசமாக இருந்ததாக கூறினார் உள்ளூர் அணியான இந்தியாவுக்கு 3 புள்ளிகள் குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்