உலகின் டாப் கிரிக்கெட் அணி இந்தியா தான்: இம்ரான்கான் புகழாராம்

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (09:12 IST)
இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்து வருகிறது என்பதும் ஐசிசி அரங்கிலும் முன்னணி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி பல்வேறு வெற்றிகளை தொடர்ச்சியாக குவித்து வரும் நிலையில் உலகின் மிகச் சிறந்த அணி இந்திய கிரிக்கெட் அணிதான் என முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனும் தற்போதைய பாகிஸ்தான் அதிபருமான இம்ரான்கான் புகழாரம் சூட்டியுள்ளார் 
 
இந்தியா தற்போது உலகின் டாப் கிரிக்கெட் அணியாக திகழ்கிறது என்றும் அதற்கு அவர்கள் கிரிக்கெட் கட்டமைப்பை முன்னேற்றியது தான் காரணம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான்கானின் இந்த புகழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்