மெல்ல மெல்ல குறையும் இந்திய கொரோனா பாதிப்பு!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (09:53 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
இந்நிலையில், இந்தியாவில் மேலும் 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,25,710 ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,813 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,06,33,025 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,36,872 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்