35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்: நியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (08:41 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
 
இன்றைய போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 6வது ஓவரில் தவான் விக்கெட்டை இழந்தது. தவான் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் 8வது ஓவரில் ரோஹித் சர்மா, 11வது ஓவரில் ராயுடு, அதே ஓவரில் தினேஷ் கார்த்திக், 12 வது ஓவரில் கில்லி, 14வது ஓவரில் கேதார் ஜாதவ் என அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுக்கள் விழுந்தன. இதில் ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர் என்பதும் தவான் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட தொடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நியூசிலாந்து அணியின் பவுல்ட் அபாரமாக பந்துவீசி 7 ஓவர்கள் 3 மெய்டன் மற்றும் 8 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். கிராந்தோம் 2 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். 
 
தற்போது இந்திய அணி 15 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களும், புவனேஷ்குமார் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்