ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (16:42 IST)
எட்டாவது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் நடந்து வரும் நிலையில் இதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, தென்கொரியா, மலேசியா ஆறு நாடுகள் விளையாடி வருகின்றன.

 ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்றும் லீக் சுற்றுகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நடப்பு சாம்பியனாக இருக்கும் நிலையில் இதுவரை மோதிய நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

இந்த நிலையில் இந்தியா தனது ஐந்தாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய நிலையில் இந்த போட்டியில் 2-1  என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதனை அடுத்து இந்தியா ஐந்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் பாகிஸ்தான் மற்றும் தென்கொரியா இரண்டாவது மூன்றாவது இடத்தில் உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்