காமன்வெல்த் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றி

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி திரில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 20 ஓவர்களில் 165 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது 
 
அந்த அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வந்தாலும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டி விறுவிறுப்பானது. இந்த நிலையில் 19 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மூன்று பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது
 
 இதனை அடுத்து மூன்று பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த இரண்டு பந்துகளி சிங்கிள்ஸ் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது. இதனால் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்