வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!

ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:04 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
 முதல் இன்னிங்சில் 227 ரன் எடுத்த வங்கதேசம், அதன் பின் இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது தொடக்க விக்கெட்டுகள் உள்பட அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக களமிறங்கிய அஸ்வின் அபாரமாக விளையாடி 42 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் 
 
ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து இருந்த நிலையில் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் அணியை மீட்டு வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்