செக்கெண்ட் இன்னிங்சில் இந்திய அணி 36 ஓவரில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கிய நியுசிலாந்து ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்து வலுவான தொடக்கத்தை அமைத்தது.
அதன் பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. துவக்கமே சொதப்பலாக இந்திய அணிக்கு அமைந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ஓவரில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.