7 வீரர்களை நீக்க சி.எஸ்.கே. அணி நிர்வாகம் திட்டம்: இளைஞர்கள் களமிறக்கப்படுவார்களா?

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (07:56 IST)
2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இருந்து 7 வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அணியில் இருந்த வயதான போட்டியாளர்கள் குறிப்பாக கேதார் ஜாதவ் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது 
 
இதனை அடுத்து இளம் வீரர்களை களமிறக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் கடந்த தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் தற்போது 15 லட்சம் மட்டுமே சிஎஸ்கே கையில் இருப்பதால் ஏழு வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதில் கேதார் ஜாதவ், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோர் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அனைத்து ரக கிரிக்கெட் போட்டியிலிருந்து வாட்சன் ஓய்வு பெற்றதால் அவர் இந்த ஆண்டு அணியில் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் முழுக்க முழுக்க ஒரு இளம் படையை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்