காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபருடன் பேசினார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, புடின் இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார்.
புடின், காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆழ்ந்த கவலையுடன் இரங்கல் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முழு ஆதரவை பெறுவதாகவும் கூறினார்.
இவ்வாறு உரையாடலின் முடிவில், பிரதமர் மோடி புடினுக்கு வெற்றி தினத்தின் 80வது ஆண்டு விழாவுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு புதினை பிரதமர் மோடி அழைத்த நிலையில் டெல்லி வர புதினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.