சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து, நியூசிலாந்து தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இதற்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை பிசிசியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.இத்தொடரில் மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்.,டி-20 தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.
ஒரு நாள் தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இத்தொடரில் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.