இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் கோலி அதிகாரத்தில் இருப்பவர்களை சீண்டும் விதமாக பேசியதுதான் அவர் கேப்டன் பதவி போக காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோலி டி 20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் போது என் நினைவுப்படி நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை நான் தலைமை தாங்குவேன். என்று கூறினார். அதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களை சீண்டியுள்ளது. இப்போது அவரின் ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கும் அதுதான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். இல்லை என்றால் அவ்வளவு வெற்றிகள் பெற்றுத்தந்த கேப்டனை நீக்குவதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. கோலி நான் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் எனக் கூறி இருக்கலாம் எனப் பேசியுள்ளார்.