பிப்ரவரியில் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படம்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:23 IST)
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் பிப்ரவரி 2022 ல் தொடங்க உள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான எனிமி திரைப்படத்தை மிக அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார் மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார். இவர் நடிகர் தனுஷிடம் மேனேஜராக இருந்து அவரின் வுண்டர்பார் நிறுவனத்தை கவனித்து வந்தவர். தனியாக படம் தயாரிக்கும் ஆசையில் எனிமி படத்தை தயாரித்தார்.

இந்த படம் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்தோடு மோதியது. ஆனால் போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை. இதனால் படம் மோசமான வசூலை சந்தித்தது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் குறைவான சம்பளத்தில் இந்த படத்தில் விஷால் நடித்துக் கொடுக்க உள்ளார். பேன் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2022 ல் தொடங்க உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்