இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. ஆனால், கடந்த சில மாதங்களாக அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், அவரால் பந்துவீசவும் முடியும். எனவே, இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது" என்று கூறினார்.
ஆசியக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது குறித்து அகர்கர், "நீங்கள் யாருக்கு பதிலாக அவரைச் சேர்க்க முடியும் என்று எனக்கு சொல்ல வேண்டும். இது அவருடைய தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல. அணியில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அந்த சூழலில், அவர் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.