இங்கிலாந்து தொடரை வெல்ல காரணமாக இருந்த ஆல்ரவுண்டர்கள்
திங்கள், 3 செப்டம்பர் 2018 (18:07 IST)
இங்கிலாந்து அணி இரண்டாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெல்ல ஆல்ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே காரணம்.
இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாய் இருந்தது.
அதேபோல் 4வது டெஸ்ட் போட்டியில் சாம் குரான் வெளிப்படுத்திய ஆட்டம் மூலம் இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் ஆல் ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற இவர்களின் பங்களிப்பு பெரும் உதவியாய் இருந்தது.