ஆஸ்திரேலிய பெண் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம்
சனி, 20 பிப்ரவரி 2021 (16:54 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்திய நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் மெல்போர்னில் நடப்பு ஆண்டில் முதலாவது கிராஸ்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெணகள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானில் நவோமி ஒசாகா அமெரிக்காவில் ஜெனிபர் பிராடி இருவரும் மோதினர்.
இதில் அபாரமாக விளையாடிய ஒசாக, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கோப்பையை வென்றார். மேலும் இக்கோப்பை அவர் 2 வது முறையாகப் பெறுகிறார். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு இத்தொடரை வென்று கோப்பையை அவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.