உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் – கம்பீர் சொல்லும் ஆருடம்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:40 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை டி 20 தொடரில் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணமாக இரு நாட்டு தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொள்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் ‘இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பல படிகள் மேல் உள்ளது. அதனால் பாகிஸ்தானுக்குதான் அழுத்தம் அதிகம். ஏற்கனவே 5 முறை இந்தியா வென்றுள்ளது. ஆனால் டி 20 போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்