மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போடக் கூடாது…. நீதிமன்றத்தில் வழக்கு!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போட்டு துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்குகளில் துளையிட்டு மூக்கனாங்கயிறு போட்டு மாடுகளை துன்புறுத்துகின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது உலகம் முழுவதும் இருக்கும் வழிமுறைதான் என்றும் இது சம்மந்தமாக பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்