ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் கடத்தல்… அதிர்ச்சி தகவல்!

புதன், 5 மே 2021 (16:58 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெகில் கடத்தப்பட்டுள்ளதாக் ஆஸி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2000 களின் தொடக்கம் வரை ஆஸி அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஸ்டூவர்ட் மெகில். இவர் இரு வாரங்களுக்கு முன்னதாக 4 மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த கடத்தல் சம்பவத்தில் கடத்தப்பட்டது மெகில் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது ஆஸீ ஊடகங்கள் அதை வெளிப்படுத்தியுள்ளன. இது சம்மந்தமாக 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்