அரசு பேருந்தில் 100 ரெம்டெசிவிர் மருந்து கடத்தல்: பெண் மருத்துவர் உடந்தையா?

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (11:59 IST)
அரசு பேருந்தில் 100 ரெம்டெசிவிர் மருந்து கடத்தல்: பெண் மருத்துவர் உடந்தையா?
கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அரசு பேருந்தில் நூறு ரெம்டெசிவிர் மருந்து கடத்தப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ரெம்டெசிவிர் மருந்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது விஜயவாடா நோக்கி வந்த பஸ்ஸில் இரண்டு பயணிகள் ரெம்டெசிவிர் மருந்தை கடத்தியது தெரியவந்தது 
 
அவர்கள் கொண்டு சென்ற பையில் 100 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு சார்பில் குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்கி கள்ளச்சந்தையில் நாற்பதாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வதற்காக இந்த மருந்தை எடுத்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது
 
மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தான் இந்த ரெம்டெசிவிர் மருந்து கடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்