நீங்க விளையாண்டது போதும், நாட்டுக்கு வாங்க – ஆஸி வீரர்களுக்கு தனி விமானம் தயார் செய்யும் வாரியம்!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:23 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வதாக சொல்லபப்டுகிறது. ஒருவேளை ஆஸி வீரர்கள் கிளம்பினால் மற்ற நாட்டு வீரர்களும் அதே போல கிளம்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்