ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வரும் நிலையில் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கல் அணி நாக் அவுட் சுற்றில் வெளியேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் கால் இறுதியின் முதல் போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணியும், ஜெர்மனி அணியும் மோதிக் கொள்ள உள்ளன. இரு நாட்டு அணிகளுமே மிக பலத்தோடு உள்ள நிலையில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.