சாதனைகள் முறியடிக்கப்படதான் உருவாக்கப்படுகின்றன… முல்டருக்கு லாராவின் அறிவுரை!

vinoth

வெள்ளி, 11 ஜூலை 2025 (09:43 IST)
கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்ட பெயரால வியான் முல்டர் உள்ளது.  தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் வியான் முல்டர் முச்சதம் அடித்துக் கலக்கினார். முதல் இன்னிங்ஸில் பேட் செய்த அவர் 334 பந்துகளில் 367 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களான லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிக்ளேர் செய்து அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் டிக்ளேர் செய்தது குறித்து பலவிதமானக் கருத்துகள் எழுந்துள்ளன. கிறிஸ் கெய்ல் முல்டர் செய்தது தவறான முடிவு என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் அந்த சதத்துக்குப் பின்னர் லாரா தன்னிடம் பேசியதாக கூறியுள்ள முல்டர் “நீ அந்த சாதனையை முறியடித்திருக்க வேண்டும். சாதனைகள் முறியடிக்கதான் உருவாக்கப்படுகின்றன. இன்னொரு முறை நீ அந்த வாய்ப்பைப் பெற்றால் கண்டிப்பாக தொடர்ந்து விளையாடி 400 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும்” எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் தான் செய்தது சரியானதுதான் என்ற நம்பிக்கை உள்ளதாக முல்டர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்