இங்கிலாந்து விக்கெட்டுக்களும் மளமளவென சரிவு: ஸ்கோர் விபரம்

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (06:31 IST)
இங்கிலாந்து விக்கெட்டுக்களும் மளமளவென சரிவு: ஸ்கோர் விபரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் ஐம்பத்தி ஏழு ரன்களும், விராத் கோலி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது அந்த அணி 5 ரன்களில் ஒரு விக்கெட்டும் ஆறு ரன்களில் ஒரு விக்கெட்டும் 52வது ரன்களில் ஒரு விக்கெட்டையும் என மூன்று விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பும்ரா மிக அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணியின் மற்ற விக்கெட்டுகளும் வீழ்த்தப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்