என் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்- ரஹானே ஆதங்கம்!

vinoth

திங்கள், 27 அக்டோபர் 2025 (07:52 IST)
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடியது அஜிங்க்யா ரஹானேதான். ஆனாலும் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர்  அதற்கடுத்த தொடர்களில் அதன் பிறகு இடம்பெறவில்லை.

தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 100 டெஸ்ட்கள் என்னும் மைல்கல்லை எட்ட இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் தற்போதுள்ள தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அதில் “என்னைப் போன்ற மூத்த வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும் என நினைக்கிறேன். இந்திய அணி சார்பாக என்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. கடந்த பார்டர்- கவாஸ்கர தொடரின் போது நான் அணிக்குத் தேவைப்பட்டேன். நானும் தயாராக இருந்தேன். வெளிநாடுகளில் விளையாடும் போது இந்திய அணிக்கு அனுபவம் அவசியம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்