இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதம் அடைந்து ஒரு சில ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதனையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது
ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து வீரர்கள் ரன்களை குவிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டாலும், மேற்கு இந்திய தீவு வீரர்களின் அபாரமான பந்து வீச்சு காரணமாக ரன்களை குவிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். கேப்டன் ஸ்டோக்ஸ் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 43 ரன்கள் எடுத்தார். பட்லர் 35 ரன்களும், பெஸ் 31 ரன்களும் பர்ன்ஸ் 30 ரன்கள் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 67.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. ஹோல்டர் மற்றும் கேப்ரியல் மிக அபாரமாக பந்துவீசினர். ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது