சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய பிரபல மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராவோ, தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் இன்று விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். விருந்தின்போது அவர் தோனி குறித்து பெருமையாக குறிப்பிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிப்போது ஏற்பட்ட பாசத்தின் விளைவே என்று கருதப்படுகிறது.
இன்றைய பிராவோ விருந்தில் தோனி, விராத் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், இந்திய வீரர்களுக்கு விருந்தளித்தது தனது மனதிற்கு நிறைவாக இருந்ததாகவும் பிராவோ தனது சமூக வலைத்தளத்தில் கூறிப்பிட்டுள்ளார். மேலும் தோனி தனது உடன்பிறவா சகோதரர் என்றும் அவருடன் இணைந்து மீண்டும் சி.எஸ்.கே அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.