தோனியின் வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடிய மகள்

Webdunia
திங்கள், 21 மே 2018 (11:03 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக திருவிழா போல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்தன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
 
இந்த நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் தோனி தனது மகளுடன் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் தோனியின் தொப்பியை கழட்டி மீண்டும் அவருக்கு மாட்டிவிட்டு விளையாடினார். அதன் பின்னர் மைதானத்தில் தோனியின் மகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்.
 
இதுகுறித்து வீடியோவை தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக  வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்