தற்போது டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் ஆர் சி பி நடத்திய ஒரு ஆடியோ போட்காஸ்ட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது நெறியாளர் உங்களுக்கு ஆர் சி பி ரசிகர்கள் ஒரு அபார்ட்மெண்ட்டை பெங்களூருவில் தருவதாக கூறினார்கள். மேலும் உங்களை இங்கேயே வந்துவிட சொல்கிறார்கள். இந்த அணியோடும் நகரத்தோடும் உங்களது பிணைப்பு எவ்வாறு இருந்தது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஏ பி டிவில்லியர்ஸ் எனக்கு 3 குழந்தைகள் உள்ளதால் நிறைய அறைகள் உள்ள வீடு வேண்டும். எனக்கும் ஆர் சி பிக்கும் ஆழமான பிணைப்பு இருந்தது. மற்ற அணிகளுக்காக அந்த பிணைப்பு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆர் சி பி ரசிகர்கள் மற்றும் இந்த நகரத்தோடு எனக்கு தனித்த பிணைப்பு உண்டு எனக் கூறியுள்ளார்.