19 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி யோடு இணையும் இசையமைப்பாளர்!

புதன், 2 பிப்ரவரி 2022 (09:39 IST)
சுந்தர் சி இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்க உள்ளாராம். இந்த படம் இந்தியில் வெளியான கபூர் & சன்ஸ் என்ற படத்தின் தழுவலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்து ஊட்டிக்கு படப்பிடிப்பை நடத்தி மொத்தமாக ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க உள்ளாராம் சுந்தர் சி. இந்த படத்தின் இன்னொரு கவனிக்க தக்க அம்சமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி யும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைய உள்ளனர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படம் பெரிய ஹிட் ஆகி இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்