நடிகர் சரத்குமாருக்கு கொரோனா; தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

புதன், 2 பிப்ரவரி 2022 (07:40 IST)
பிரபல நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று உருவாகி வருவதாகவும் அதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்திகளை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்