தோனியின் பினிஷிங் மேட்ச்களை பார்த்தது உத்வேகம் அளித்தது… தீபக் சஹார் பதில்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:13 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போது பொறுப்புடன் விளையாடி தீபக் சஹார் கடைசி வரை அவ்ட் ஆகாமல் 69 ரன்களை சேர்த்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து பேசியுள்ள அவர் ‘தோனியின் பல பினிஷிங் மேட்ச்களை பார்த்தது உத்வேகம் அளித்தது. அவரிடம் எப்போது பேசினாலும் கடைசி வரை போராட வேண்டும் எனக் கூறுவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்