எனக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போது அவரிடம் செல்வேன் – அஜிங்க்யே ரஹானே

vinoth

புதன், 30 ஏப்ரல் 2025 (08:17 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் 205 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய டெல்லி அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் தேவைப்படும் ரன் விகிதம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அதன் காரணமாக அழுத்தம் உருவாகி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழக்க ஆரம்பித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் மட்டுமே சேர்த்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பங்களிப்பு செய்த சுனில் நரேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவரைப் பற்றி பேசும்போது கே கே ஆர் அணிக் கேப்டன் ரஹானே “எனக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போது நான் சுனில் நரேனிடம் செல்வேன். அவர் கடந்த காலங்களில் இந்த அணியின் சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். இப்போது அவர் பயிற்சிக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கி சீக்கிரமே வந்துவிடுகிறார். தன்னுடைய பேட்டிங்கையும் மேம்படுத்த உழைக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்