ரெய்னா, ராயுடு அதிரடியில் மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (21:43 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் ராயுடு வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரெய்னா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 26 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியாறினார். 
 
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதையடுத்து மும்பை அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்