இப்போதான் ரெய்னா அரும புரியுது… புலம்பும் சி எஸ் கே ரசிகர்கள்!

புதன், 23 செப்டம்பர் 2020 (11:59 IST)
சி எஸ் கே அணி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதை அடுத்து பலரும் பேட்டிங்கில் ரெய்னா இல்லாத குறை தெரிகிறது எனக் கூறி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது லுங்க் நிக்கிடியின் கடைசி ஓவர். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இங்கிடி.

217 ரன்கள் இலக்கை சி எஸ் கே துரத்திய நிலையில் சி எஸ் கேவின் முன் வரிசை மிகவும் பலவீனமாக இருந்ததால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே பலரும் ரெய்னா இல்லாததை இப்போது உணர்கிறோம். ரெய்னாதான் சிஎஸ்கேவின் பேட்டிங் தூண் என்றெல்லாம் சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்களாவும், பதிவுகளாகவும் பகிர ஆரம்பித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்