குறிப்பாக 32 பந்துகளில் 74 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் 9 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த ஸ்டீவன் சுமித் 4 சிக்சர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி ஓவரை ஆடிய ஆர்ச்சர் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்தது போட்டி ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைய ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் 4 சிக்ஸர்களும், டூபிளஸ்சிஸ் 7 சிக்ஸர்களும், தோனி 3 சிக்ஸர்களும், மற்றும் சாம் கர்ரன் 2 சிக்ஸர்களும் அடித்தனர். எனவே இந்த போட்டியில் இரண்டு அணியினர்களும் சேர்த்து மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்,.