2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (07:49 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 262 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதனை அடுத்து நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக சதம் அடைத்த கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்