அரசு பாராட்டு விழாவை புறக்கணிக்க காமன்வெல்த் வீரர்கள் முடிவு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (14:43 IST)
அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், முன்னாள் வீரர்களின் கோரிக்கை படி அரசு விழாவை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

 
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீரஜ் சோப்ரா, மனோஜ் குமார், வின்ஸ் பகோட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
 
இந்நிலையில் அவர்களை கவுரவிக்கும் வகையில் பாராடு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனே வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தொகையும், வேலையும் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினர்.
 
இதனால் தற்போது வெற்றி பெற்ற வீரர்கள், அரசு சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வீரர்கள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்