டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் – சிறப்பான தொடக்கம் !

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (16:35 IST)
சென்னை பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடி வருகிறது.

12 ஆவது ஐபில் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் 18 ஆவது போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதுகின்றன

இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளன. ஆனால் நெட் ரன்ரேட் படி பஞ்சாப் அணி மூன்றாம் இடத்திலும் சென்னை அணி 4 ஆம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 11 முறை சென்னை அணியும் பஞ்சாப் அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த போட்டியில் டாஸில் ஜெயித்த சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் காயம் காரணமாக பிராவோவுக்குப் பதில் டு பிளஸ்சி களமிறக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த போட்டியில் விளையாடாத ஹர்பஜன் மற்றும்  குஹ்ஹலின் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்களை எடுத்துள்ளது. டூ ப்ளஸ்சி 27 ரன்களோடும் வாட்சன் 26 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்