முதல் பந்திலே விக்கெட் வீழ்த்திய பூம்ரா: இங்கிலாந்துக்கு ஆரம்பமே தடுமாற்றம்
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (16:12 IST)
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்திலே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது.
பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கேட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார்.
இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.