மீண்டும் அணிக்கு திரும்பிய பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்: இந்திய அணிக்கு சவாலா?

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (16:36 IST)
மீண்டும் அணிக்கு திரும்பிய பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்: இந்திய அணிக்கு சவாலா?
சமீபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தற்போது நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸ் மற்றும் முக்கிய பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறவில்லை 
 
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்சர் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்தியாவுக்கு எதிரான தொடரில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்சர் அணிக்கு மீண்டும் திரும்புவதாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவரும் அணியில் இடம்பெறுவார்கள் என்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது என்றும் இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்சர் விளையாடுவது உறுதி என்றும் இதன் மூலம் தெரியவருகிறது 
 
இரண்டு முன்னணி வீரர்கள் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளதால் இந்திய அணிக்கு சவாலாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்