இரண்டாவதாக களம் இறங்கிய இந்தியா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 114 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது இந்தியா. மயங்க் அகர்வால் இரட்டை சதத்தை விளாசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனாலும் புஜாரா, ரஹானே மற்றும் ஜடேஜா தலா ஒரு அரை சதத்தை வீழ்த்தி வங்கதேசத்தை திணறடித்தார்கள்.
வங்கதேசத்தை விட 343 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேசம் நெருங்குமா என்பது சந்தேகம்தான். வங்கதேச கேப்டன் அல் ஹசன் விளையாட தடை விதிக்கப்பட்டதும், புதிய கேப்டனின் அனுபவமின்மையும் வங்க தேசத்தின் மோசமான ஆட்டத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.