அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக சிறப்பாக வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 180 ரன்கள் முன்னிலையோடு தொடங்கிய இந்தியா ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தின் மூலம் 427 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்னயிக்கபட்டுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் சேர்த்தார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 430 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது 54 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.