ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:55 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்  அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தற்போது மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் செர்பியா நாட்டின் நினா என்ற வீராங்கனையை 6- 3, 6- 0 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் பெலாரஸைச் சேர்ந்த அரினா சபேலெங்கா என்பவரை ரஷ்யாவின் டேரியாவை நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதனையடுத்து வெற்றி பெற்ற இருவரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
 
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் கனடாவின் வாசெக் போஸ்பிசிலை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்