6 விக்கெட்டுக்களை இழந்து திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு மேலும் ஒரு விக்கெட்..!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெல்லி மைதானத்தில் தற்போது இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் அந்த அணியின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி வருகின்றனர். 
 
தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவாஜா 81 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தாலும் இன்னொரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. 
 
சற்றுமுன் வரை 55 ஓவர்களில் ஆஸ்திரேலியா இழந்து 190 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் மூன்று விக்கெட்டுக்களையும், ஷமி 2 விக்கெட்டுக்களையும்,  ஜடேஜா ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்