மொத்தமா 840 விமானங்கள் வேணும்! பல்க் ஆர்டர் கொடுத்த ஏர் இந்தியா!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (11:22 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் கடனில் மூழ்கிய நிலையில் டாடா நிறுவனத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்களை வாங்க டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி ஏர்பஸ் நிறுவனத்தியம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்பட உள்ளது. மீத 370 விமானங்கள் கொள்முதல் உரிமத்துடன் வாங்க உள்ளதாக ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் விமானங்களை முதன்முறையாக தற்போது கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்