575 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் பரிதாப நிலையில் தென்னாப்பிரிக்கா

புதன், 28 டிசம்பர் 2022 (14:03 IST)
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் 200 ரன்களும், அலெக்ஸ் கேரே 111 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் 386 ரன்கள் பின்தங்கி இருந்த ஆப்பிரிக்க ஆப்பிரிக்க அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது/ அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்