மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (13:57 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நேற்று நடந்த இந்தியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஆனால் நேபாள அணி வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
 
அதேபோல் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ யானையை 103 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்ததை அடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது 
 
மேலும் இன்று வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகளும், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளும் மோதவுள்ளன. இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்