நான் சசிகலாவை பற்றி குறிப்பிடவில்லை: அஷ்வின் சரண்டர்!!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (11:27 IST)
தன்னுடைய டிவிட்டர் பதிவுக்கும், சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளதற்கும் சம்மந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா நடராஜன், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ”கூடிய விரைவில் 234 வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க உள்ளது,” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
சசிகலாவுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து, அஸ்வின் இந்த டிவீட்டை பதிவு செய்ததாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின. 
 
இந்நிலையில் தன்னுடைய அந்த ட்வீட், தமிழக அரசு சம்மந்தப்பட்டது அல்ல என அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்